சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
|பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக சில மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில் காலை 5.20 மணியில் இருந்து 5.15 மணியாகவும், மதியம் 1.15 மணியில் இருந்து 1.05 மணியாகவும் நேர மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் காலை 6.25 மணியில் இருந்து 6.30 மணியாகவும், மதியம் 4.55 மணியில் இருந்து 5.05 மணியாகவும் மற்றும் இரவு 8.55 மணியில் இருந்து 9 மணியாகவும் நேர மாற்றம் செய்யப்படுகிறது.
மூர் மார்க்கெட்டில் இருந்து பொன்னேரி செல்லும் மின்சார ரெயில் மதியம் 2.05 மணியில் இருந்து 1.55 மணியாகவும், மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் இரவு 8.10 மணியில் இருந்து 8.20 மணியாகவும், மூர் மார்க்கெட்டில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயில் இரவு 8.20 மணியில் இருந்து 8.10 மணியாக நேர மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரெயில் இரவு 9.45 மணியில் இருந்து 9.10 மணியாகவும், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் அதிகாலை 4.15 மணியில் இருந்து 4.05 மணியாகவும் நேர மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயில் அதிகாலை 5.20 மணியில் இருந்து 5.10 மணியாகவும், அதிகாலை 5.55 மணியில் இருந்து 5.40 மணியாகவும், மாலை 4 மணியில் இருந்து 4.30 மணியாகவும் நேர மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரி செல்லும் மின்சார ரெயில் அதிகாலை 5.15 மணியில் இருந்து 5.20 மணியாக நேர மாற்றம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.