< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
|24 Jun 2022 7:14 AM IST
தாம்பரம்-கடற்கரை இடையே பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுக்குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
* தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.40 மணி, 11.15 மணி மற்றும் 11.35 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.30 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.