< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை-சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம்
|15 April 2024 6:27 PM IST
கோவை-சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை,
அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவை- சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதிகளில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி கோவையிலிருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி ரெயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படாது.
இதுபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதி சென்னையில் இருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து கோவை வரை இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.