< Back
மாநில செய்திகள்
கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
மாநில செய்திகள்

கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
29 Aug 2024 1:27 AM IST

கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அரக்கோணம் ரெயில்வே யார்டு பகுதியில் ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், பாயிண்ட்ஸ் மற்றும் கிராசிங்கை மாற்றியமைக்கும் பொறியியல் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 1-ந் தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி கோவை-சென்னை சென்டிரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) வருகிற 1-ந் தேதி கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் காட்பாடி- சென்னை சென்டிரல் இடையே இயங்காது.

இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் சென்னை சென்டிரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) வருகிற 1-ந் தேதி சென்னை சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கோவை வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்