< Back
மாநில செய்திகள்
சென்னை-புதுச்சேரி, திருப்பதி ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
மாநில செய்திகள்

சென்னை-புதுச்சேரி, திருப்பதி ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

தினத்தந்தி
|
23 July 2024 7:52 AM IST

பொறியியல் பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டத்துக்குட்பட்ட விழுப்புரம்- சின்னபாபுசமுத்திரம் ரெயில் நிலையங்களுக்கிடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்- புதுச்சேரி முன்பதிவில்லா ரெயில் (வண்டி எண் 06025) இன்று (செவ்வாய்க்கிழமை) விழுப்புரம் ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.

அதேபோல் புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி- திருப்பதி முன்பதிவில்லா ரெயில் (வண்டி எண் 16112), புதுச்சேரி- விழுப்புரம் இடையே இன்று பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரெயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 3.45 மணிக்கு திருப்பதி புறப்பட்டுச்செல்லும்.

இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்