< Back
மாநில செய்திகள்
சென்னை சென்டிரல்-மேற்கு வங்காளம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னை சென்டிரல்-மேற்கு வங்காளம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
24 April 2024 2:29 AM IST

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-மேற்கு வங்காளம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்- மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22611) இன்று (புதன்கிழமை) முதல் ஹிஜ்லி, கரக்பூர், பட்டா நகர் வழித்தடத்தில் செல்லும்.

அதேபோல, மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) வருகிற 26-ந் தேதி முதல் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்