< Back
மாநில செய்திகள்
சென்னை சென்டிரல்-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
மாநில செய்திகள்

சென்னை சென்டிரல்-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
16 April 2024 3:14 AM IST

பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 23, 24-ந் தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, கர்நாடக மாநிலம் மைசூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16021) கிருஷ்ணராஜபுரம், பையப்பனஹள்ளி, பானஸ்வாடி, யஸ்வந்த்பூர், கே.எஸ்.ஆர்.பெங்களூரு வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் பெங்களூரு கிழக்கு மற்றும் பெங்களூரு கண்டோன்மென்ட் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது.

அதேபோல, மைசூரில் இருந்து இன்று மற்றும் 23, 24-ந் தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, சென்டிரல் வரும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஸ்வந்த்பூர், பானஸ்வாடி, பையப்பனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்