< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவையில் நாளை மாற்றம்
|27 May 2024 10:28 PM IST
பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை,
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரெயில்கள் சென்னைக்கு மிக முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது. சென்னை புறநகர் மற்றும் சென்னை உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையாக இருப்பதால், தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் ரெயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை (மே 28) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரெயில்கள் நாளை (மே28) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிங்கபெருமாள் கோவில் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.