< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
நவராத்திரி கொலுவில் சந்திரயான்
|23 Oct 2023 12:00 AM IST
புதுக்கோட்டை சுந்தர சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதை குறிப்பிடும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை தெற்கு 3-ம் வீதியில் சுந்தர சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் பூமி, நிலா, வைகுண்டம், கயிலாயம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதை குறிப்பிடும் வகையில் மாதிரி வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனை பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட போது எடுத்த படம்.