மதுரை
சந்திரயான்-3 திட்டம் வெற்றிக்குபள்ளிக்கூட மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை
|சந்திரயான்-3 திட்டம் வெற்றிக்கு பள்ளிக்கூட மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
உசிலம்பட்டி,
சந்திரயான்-3 திட்டம் வெற்றிக்கு பள்ளிக்கூட மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
சந்திரயான்-3
உலகமே உற்றுநோக்கி காத்திருக்கும் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நேற்று நிலவில் தரையிறங்கியது. இந்த திட்டத்தின் வெற்றியை இந்தியாவின் அனைத்து மக்களும் பெருமையாக கருதும் நிலையில் இந்த திட்டம் வெற்றியடைய அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.. இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் அப்துல்கலாம் கண்ட கனவான சந்திரயான் திட்டம் வெற்றியடைய உள்ளதை நினைவு கூறும் விதமாக அப்துல் கலாம் வேடமணிந்த மாணவர்கள், என்னுடைய கனவு திட்டம் நிறைவேற உள்ளது, மாணவர்களும் கனவு காணுங்கள் எனது சந்திரயான் திட்டம் வெற்றியடைய நானும் பிரார்த்திக்கிறேன், மாணவ-மாணவிகளான நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொள்ள பள்ளியில் பயிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.
பட்டாசு வெடித்தனர்
வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சி ஒ.பி.சி. அணி முன்னாள் மாநில துணைத்தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி தலைமையில் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இதில் ஆதி கொற்றவை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஆதி முத்துக்குமார், முன்னாள் ராணுவ வீரர்கள் சதீஷ்குமார், வேல்முருகன், சரவணன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.