< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட சாந்தன் உடல்: இன்று இறுதி சடங்கு
|2 March 2024 2:01 AM IST
சாந்தனின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இன்று இறுதி சடங்கு நடைபெறுகிறது.
சென்னை,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பின்னர் சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டவர் சாந்தன். இவர் உடல்நல குறைவால் கடந்த 28-ந் தேதி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் இலங்கைக்கு அனுப்புவதற்காக சாந்தனின் உடல் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இலங்கை தூதரகத்தின் அனுமதிக்கு பின்னர், சாந்தனின் உடல் நேற்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் பார்வைக்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இன்று (சனிக்கிழமை) அவருக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது.