< Back
மாநில செய்திகள்
மிக கனமழைக்கு வாய்ப்பு: இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மிக கனமழைக்கு வாய்ப்பு: இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!

தினத்தந்தி
|
15 Dec 2023 1:06 PM IST

10 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 10 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்