< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு...!
|23 Nov 2023 2:22 PM IST
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி இருக்கிறது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (23-11-2023) முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.