< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
4 Jan 2024 12:34 PM GMT

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்