8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
|தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை பெரும்பாலான இடங்களில் பரவலாக பெய்து வருகிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.