< Back
மாநில செய்திகள்
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
11 July 2024 2:33 AM GMT

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 16-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்