< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
23 May 2024 7:48 AM IST

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, தற்போது, கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் நேற்று லேசான மழை காணப்பட்டது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 5 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்