< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!
|30 Nov 2023 11:21 AM IST
சென்னை ஐயப்பன் தாங்கலில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.