< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
19 July 2024 11:37 AM IST

நெல்லை, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

அது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்