< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...!
|29 Oct 2023 8:14 AM IST
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கரூர், திருச்சி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.