< Back
மாநில செய்திகள்
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
மாநில செய்திகள்

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
23 Oct 2023 11:11 AM IST

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்றே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்