< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
|14 May 2024 7:20 AM IST
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை,
கத்திரி வெயில் தாக்கத்துக்கு மத்தியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, காற்றின் திசை மாற்றம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.