< Back
மாநில செய்திகள்
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
11 Jun 2024 5:28 PM IST

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை,

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இது மட்டுமல்லாமல், வெப்ப சலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், தருமபுரி, குமரி, தென்காசி, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்