< Back
மாநில செய்திகள்
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
14 May 2024 11:22 PM IST

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையில் இன்று முதல் 20-ம் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்