< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
13 Nov 2022 8:45 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர், சேலம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்