< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
|10 Aug 2023 10:40 PM IST
கடலூர், விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், இன்று பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.