தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
|தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
புயலாக பாதிப்படைந்த இடங்களை முதல் அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்தாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை புயல் கரையை கடந்த நாளில் இருந்து இன்னும் மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.