< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
2 April 2024 10:55 PM IST

நெல்லை, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நெல்லை, தென்காசி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





மேலும் செய்திகள்