< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
|18 Jun 2022 5:22 PM IST
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானில்லை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 35 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.