< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
|15 May 2024 10:29 PM IST
25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்துக்கு மத்தியில் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சென்னை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.