< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
|2 Aug 2023 1:54 PM IST
தமிழகத்தில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
நேற்று வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை வங்காளதேசம் கடற்கரையை கடந்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ,
02-08-2023 முதல் 08-08-2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.