< Back
மாநில செய்திகள்
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
3 Jun 2024 7:18 PM IST

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் அதிகளவு மழை பொழிவை வழங்கும் தென் மேற்கு பருவமழை, கேரளாவில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. இதன் காரணமாக, கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஈரோடு, சேலம், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்