< Back
மாநில செய்திகள்
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மாநில செய்திகள்

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
16 Nov 2023 8:52 AM GMT

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,

நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18 ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரை வழியே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்