கன்னியாகுமரி
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
|மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்டது.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் சண்முகலிங்கம் என்பவரின் மகள் ராஜஸ்ரீ (வயது 37) வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மார்த்தாண்டத்தில் வாழைநார் பயிற்சி பெற்று விட்டு, பிற்பகல் 3 மணி அளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஞாறான்விளை சந்திப்பில் வரும்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமிகள் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் ராஜஸ்ரீ கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார்.
உடனே ராஜஸ்ரீ திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். அவரின் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் தங்க சங்கிலியை பறித்தவர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதுகுறித்து ராஜஸ்ரீ மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 பேர்களையும் தேடி வருகிறார்கள்.
--