< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பள்ளிபாளையத்தில்நடந்து சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகைப்பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|1 July 2023 12:30 AM IST
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் அர்த்தநாரி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 75). இந்த நிலையில் நேற்று மாலை செல்லம்மாள் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென செல்லமாள் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து செல்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.