தஞ்சாவூர்
பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
|பெண்ணிடம் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது.
தஞ்சை விளார்ரோடு பாப்பாநகரை சேர்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது47). நேற்றுமுன்தினம் பாலகிருஷ்ணா தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பரிசுத்தம்நகர் கிட்டு மைதானம் அருகே சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். இந்த 2 பேரும் திடீரென ராஜேஸ்வரி கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜேஸ்வரி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.