< Back
மாநில செய்திகள்
ஓசூரில் பெண் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் நகைப்பறிப்பு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில் பெண் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் நகைப்பறிப்பு

தினத்தந்தி
|
15 Jan 2023 12:15 AM IST

ஓசூர்:

ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ அருகே உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சுகுமாரன். இவருடைய மனைவி சுபா (வயது 31). இவர் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு காரில் வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் சுபா அருகே சென்று காரை நிறுத்தினார். இதையடுத்து திடீரென சுபா முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சுபா ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்