< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

தினத்தந்தி
|
18 Jun 2022 9:41 PM IST

பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள ‌தனியார் கல்லூரி அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் பெருமாள். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 52). இவர் சம்பவத்தன்று பெட்டிக்கடையில்‌ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விஜயலட்சுமியிடம் பொருட்களை வாங்கி விட்டு ரூ.500-ஐ கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர்.

அந்த சமயம் பணத்தை வாங்கிய அவர் மீதி பணத்தை‌ கொடுப்பதற்கு குணிந்து கல்லாவை திறந்ததாக கூறப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட 2 பேரும் விஜயலட்சுமியின் கழுத்தில்‌ அணிந்திருந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌2 பவுன் நகையை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி சத்தம் போட்டு திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் நகையுடன் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்