< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
மிளகாய் பொடியை கண்ணில் தூவிமுன்னாள் ஊராட்சி தலைவரிடம் 7 பவுன் நகை பறிப்பு
|13 Oct 2023 12:30 AM IST
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள வி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்த கவுண்டர் மகன் பி.கே.ராமஜெயம். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வி.பள்ளிப்பட்டியில் இருந்து சனத்குமார் ஆற்றின் அருகே உள்ள தனது விவசாய நிலத்துக்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்தபோது எதிரே வந்த 2 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் ராமஜெயத்தின் மீது மிளகாய் பொடியை கண்ணில் தூவி விட்டு அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராமஜெயம் கம்பைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து மிளகாய் பொடி தூவி 7 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.