கிருஷ்ணகிரி
ஓசூரில்சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6½ பவுன் நகைப்பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபர்களுக்கு வலைவீச்சு
|ஓசூர்:
ஓசூரில் சாலையில நடந்து சென்ற பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைப்பறிப்பு
ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் ராமராஜ். இவருடைய மனைவி மார்கரெட் (வயது 47). ஓசூர் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதிய உணவுக்காக அவர் வீட்டுக்கு சென்றார். தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி அருகே நடந்து சென்றபோது எதிர்திசையிலிருந்து மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர்.
அதில் பின்பக்கம் அமர்ந்திருந்த வாலிபர், மார்கரெட்டின் கழுத்தில் இருந்த 6½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். அப்போது மார்கரெட் தடுக்க முயன்றதால் அவரை சாலையில் சிறிது தூரம் இழுத்து சென்று போட்டு வின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
விசாரணை
இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் மார்கரெட்டிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வாட்ஸ்-அப்பில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதேபோல் ஓசூர்- பாகலூர் சாலையில் திருப்பதி மெஜஸ்டிக் பகுதியில் சாலையில் நடந்து சென்ற உதயசெல்வி என்பவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்திலும் ஈடுபட்டது அதே மர்ம நபர்கள்தானா? வட நாட்டு கும்பலா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்