< Back
மாநில செய்திகள்
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
அரியலூர்
மாநில செய்திகள்

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
21 Sept 2022 12:04 AM IST

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்கப்பழம். விவசாயி. இவரது மனைவி மணிமேகலை(வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அவரது கணவருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பிவேலியை அறுத்துவிட்டு, கதவின் உள்பக்க தாழ்ப்பாளை திறந்து உள்ளே புகுந்த மர்மநபர், மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துள்ளார்.

இதனால் திடுக்கிட்டு கண்விழித்த மணிமேகலை, தாலிச்சங்கிலியை கைகளால் பற்றிக்கொண்டு சத்தம்போட்டார். அப்போது சங்கிலி அறுந்து, அதன் ஒரு பகுதி மர்ம நபரின் கையில் சிக்கியது. இதையடுத்து சுமார் 3 பவுன் சங்கிலியுடன் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து மணிமேகலை கொடுத்த புகாரின்பேரில் தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்