< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
சதுரங்கப்பட்டினம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
|26 Jan 2023 4:57 PM IST
சதுரங்கப்பட்டினம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சங்கிலி சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அருகே உள்ள நெய்குப்பி ஊராட்சிக்குட்பட்ட அணுபுரம், இந்திரா காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் பத்மாவதி (வயது 66). இவர் நேற்று மாலை வழக்கம் போல் அணுபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனது மகன் சசிகுமார் நடத்தும் கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இந்திரா காந்தி நகர் தேவாலயம் அருகே அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், திடீரென அவரது கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சதுரங்கப்ட்டினம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்