< Back
மாநில செய்திகள்
நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு: பைக்கில் வந்த மர்மநபர்கள் கைவரிசை
மாநில செய்திகள்

நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு: பைக்கில் வந்த மர்மநபர்கள் கைவரிசை

தினத்தந்தி
|
4 July 2023 11:36 PM IST

அனிதா கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

சேலம்,

சேலத்தில், நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 7 சவரம் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் வழக்கம்போல குரங்கு சாவடி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அனிதா கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

மேலும் செய்திகள்