< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
சங்கிலி பறிப்பு
|16 Sept 2023 2:01 AM IST
ஒரத்தநாடு அருகே, குடிக்க தண்ணீர் கேட்பதுபோல் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா செங்கமேடு கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி சுபத்ரா(வயது 29). இவர் சம்பவத்தன்று பத்துதாக்கு கிராமத்தில் ஒரத்தநாடு-திருவோணம் பிரதான சாலையோரத்தில் உள்ள தனது விவசாய கிணற்று கொட்டகையில் இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாலையோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சுபத்ராவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் எடுப்பதற்காக சுபத்ரா திரும்பியபோது திடீரென அந்த மர்ம நபர்கள் சுபத்ரா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் சுபத்ரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபத்ராவிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.