< Back
மாநில செய்திகள்
கரூர் மாவட்டத்தில் தூய்மையை பேணிகாக்கும் அரசு அலுவலகங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
கரூர்
மாநில செய்திகள்

கரூர் மாவட்டத்தில் தூய்மையை பேணிகாக்கும் அரசு அலுவலகங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்

தினத்தந்தி
|
8 Jun 2022 6:58 PM GMT

கரூர் மாவட்டத்தில் தூய்மையை பேணிகாக்கும் அரசு அலுவலகங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர்,

ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கரூர் மாநகராட்சி சார்பில் தூய்மை விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுமக்களிடையே தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. தூய்மை குறித்து பொதுமக்களிடையே என் குப்பை என் பொறுப்பு என்னும் கொள்கையின்படி விழிப்புணர்வை அரசு அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும்.

ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்

அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு அரசு அலுவலரின் கடமை. மாதத்தின் 2 மற்றும் 4-ம் சனிக் கிழமைகளில் நடைபெறும் எனது கரூர் எனது பெருமை என்கிற மாபெரும் தூய்மை இயக்கத்திற்கு துறை ரீதியாக ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் சிறப்பாக தூய்மையை பேணிகாக்கும் அரசு அலுவலகளுக்கு சிறந்த அலுவலகம் என்ற சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

விழிப்புணர்வு உறுதிமொழி

ெதாடர்ந்து தூய்மை குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் லட்சியவர்மா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்