< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவு
|9 May 2023 3:48 PM IST
சான்றிதழ்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க மாவட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவ, மாணவிகளுக்கு வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியர்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மாணவ, மாணவிகள் இணைய வாயிலாக சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு உடனடியாக காலம் தாழ்த்தாமல் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக சான்றிதழ்களை உடனடியாக வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.