காஞ்சிபுரம்
ஜல்ஜீவன் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
|ஜல்ஜீவன் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டு ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தி குறித்த காலத்தில் நூறு சதவீத திட்ட இலக்கினை அடைந்ததற்காக நல்ஆளுமைக்கான விருதினை பாரத பிரதமரால் தேசிய குடிமை பணி தினத்தன்று புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர். மா.ஆர்த்திக்கு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்து நிலை அலுவலர்களை சிறப்பிக்கும் நிகழ்வாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருசெல்வகுமார் மற்றும் மாவட்ட அளவிலான பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.