< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

தினத்தந்தி
|
30 April 2023 4:04 PM IST

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2022-2023-ம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 2-ம் பரிசு தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் எடையாளர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் 2-ம் பரிசு தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வழங்கி பாராட்டினார். இதில் செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்