< Back
மாநில செய்திகள்
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

தினத்தந்தி
|
27 March 2023 12:30 AM IST

வேடசந்தூர் சப்-டிவிசனில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 43 பவுன் நகை, ரூ.18 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 16 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வேடசந்தூர் சப்-டிவிசனில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, தனிப்படை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், போலீசார் பாசித்ரகுமான், பாலாஜி, நாகராஜ், பாஸ்கரன் ஆகியோரை பாராட்டி திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சான்றிதழ் மற்றும் பணமுடிப்பை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்