< Back
மாநில செய்திகள்
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

தினத்தந்தி
|
23 Oct 2022 6:37 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமீபத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் செல்போன்கள் காணாமல் போனதாக மற்றும் வழிப்பறி, கொள்ளை, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்றவை குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதன் மூலம் போலீசார் துரித விசாரணை மேற்கொண்டு காணாமல் போன 100 செல்போன்கள், 20 பவுன் நகைகள், 10 மோட்டார் சைக்கிள்கள், ஒரு அறுவடை எந்திரம் ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.

அதனை வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைத்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒப்படைத்தார். இந்த சம்பவங்களில் துரித விசாரணை மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருடப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள அறுவடை எந்திரத்தை கண்டுபிடித்து குற்றவாளிகளையும் கைது செய்து சிறப்பாக பணியாற்றிய திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசாருக்கும், கஞ்சா வழக்கில் கைதானவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாருக்கும், தானிப்பாடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காணாமல் போன 7 பஞ்சலோக சிலைகள் மற்றும் 2 வெண்கல சிலைகளை மீட்டு குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசாரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்